கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்

கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. 
கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம்


கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 13 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 17 உறுப்பினர்களும் உள்ளனர். எனினும், கோவா முன்னேற்றக் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலா 3 உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. 

அதனால் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், அங்கு ஆட்சியில் அமரமுடியவில்லை. 

இந்நிலையில், கோவாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. இதுதொடர்பாக, கோவா ஆளுநருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லிகர் எழுதியுள்ள கடிதத்தில், 

"பாஜக வழிநடத்தும் பெரும்பான்மை இல்லாத அரசை நீக்கிவிட்டு, தனிப் பெரும் கட்சியான காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். கோவாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயற்சித்தால் அது சட்டத்துக்கு புறம்பானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com