சுடச்சுட

  

  ஆந்திர பேரவைத் தேர்தலில் 150 இடங்களில் வெல்வதே லட்சியம்

  By DIN  |   Published on : 17th March 2019 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chandrababu_naidu

  ஆந்திரத்தில் அடுத்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்து, தனது லட்சியத்தை நிறைவேற்றுத் தருமாறு என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
   திருப்பதியில் உள்ள தாரகராமா மைதானத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை அவர் சனிக்கிழமை மாலை தொடங்கினார். அப்போது அவர் பேசியது:
   கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட நரேந்திர மோடி, 18 வாக்குறுதிகளை வழங்கினார். அதில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்தை 5 ஆண்டுகளில் தருவதாகவும், கடப்பாவில் ஸ்டீல் தொழிற்சாலை, ராயலசீமா மற்றும் வட ஆந்திரத்தில் உள்ள ஏழு பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி, பெட்ரோலியம் கெமிக்கல் பெருவழித்தடம், துறைமுகம் அமைப்பது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. நமது உரிமையையும், கோரிக்கைகளையும் கேட்டதற்காக வருமான வரித்துறை, சிபிஐ என மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
   வெடிகுண்டுகளுக்கும், தோட்டாக்களுக்கும் பயப்படாத நாங்கள் மோடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். ஆந்திர மாநில பிரிவினைச் சட்டத்தின்படி தெலுங்கானா அரசு ரூ.5 ஆயிரம் கோடியை நமக்கு அளிக்க வேண்டும். ஆனால் நமது மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டு ஆந்திரத்துக்கு பணம் அளிக்க முடியாது என்று தெலங்கானா மாநிலம் கூறுகிறது. அதன் முதல்வர் சந்திரசேகர் ராவ் தற்போது ஆந்திரத்தை மிரட்டும் நிலைக்கு வந்துள்ளார்.
   நாட்டிலேயே குறைந்த ஊழல் உள்ள மாநிலத்தில் மூன்றாவது இடத்தில் ஆந்திரத்தைக் கொண்டு வந்துள்ளோம். இதை முதலிடத்துக்கு உயர்த்துவதே லட்சியம். ஆந்திரத்தில் உள்ள ஒரு கோடி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு இரண்டு கட்டங்களாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எந்த அரசும் செய்யாத வகையில் ரூ.24,500 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியாக மத்திய அரசு ரூ.6 ஆயிரம் நிதி ஒதுக்குவதாக தெரிவித்த நிலையில் தெலுங்கு தேசம் அரசு ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளது.
   ஆந்திர மக்கள் அனைவரும் இணைந்து வாக்களித்து தெலுங்கு தேசம் கட்சியை 150-க்கும் மேற்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதுவே என் லட்சியம் என்றார் அவர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai