Enable Javscript for better performance
உ.பி: 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது: மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உ.பி: 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது: மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் அறிவிப்பு

    By DIN  |   Published on : 17th March 2019 05:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    raj-bha

    லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அதிரடி திருப்பமாக பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி போட்டியிடும் 78 தொகுதிகளில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும்,  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்கள் என 75 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியட உள்ளது. அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இந்த கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிடுகிறது. 

    காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு குடும்பத்தினர் எப்போதும் போட்டியிடும் தொகுதியான ரேபரேலி, அமேதியில் தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்திருந்தது. 

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் மொத்தம் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜ் பாபர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடாத இரண்டு தொகுதிகளுக்கு கைமாறாக 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளது. 

    மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் முலாயம் சிங் யாதவ், மாயாவதி, அஜித் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்காக 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியில்லை. அதாவது, சமாஜ்வாதி முன்னாள் தலைவர் முலாயம் சிங் போட்டியிடும் மைன்புரி தொகுதி, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னாஜ் தொகுதி, மாயாவதி போட்டியிடும் ராஜ் பாப்பார் தொகுதி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங் மற்றும் ஜெயந்த் சவுத்திரி போட்டியிடும் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று கூறியுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai