சுடச்சுட

  

  ஒடிஸாவில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான பிரகாஷ் பெஹெரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.
   ஒடிஸாவின் சாலிபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகாஷ் பெஹெரா. இவர், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக சனிக்கிழமை அறிவித்தார். ஏற்கெனவே, நவகிஷோர் தாஸ், ஜோகேஸ் சிங் மற்றும் கிருஷ்ணா சந்திரா சகரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இதில், தாஸ் மற்றும் சிங், பிஜு ஜனதா தள கட்சியிலும், சகரி பகுஜன் சமாஜ் கட்சியிலும் சேர்ந்துள்ளனர்.
   இந்த நிலையில், நான்காது எம்எல்ஏவாக பெஹெராவும் விலகுவதாக அறிவித்துள்ளது ஒடிஸாவில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
   இதுகுறித்து பெஹெரா காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், " ஒடிஸா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமை என்னை புறக்கணித்ததையடுத்து, கட்சியிலிருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை ஒடிஸா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நிரஞ்ஜன் பட்நாயக்குக்கும் பெஹெரா அனுப்பி வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்காக கடந்த 20-ஆண்டுகளாக பணியாற்றியும் தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என பெஹெரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
   கடந்த 2014-ஆம் ஆண்டு கட்டாக் மாவட்டத்தில் உள்ள சாலிபூர் தொகுதியில் போட்டியிட்ட பிராகஷ் பெஹெரா காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai