சுடச்சுட

  

  "கர்தார்பூர் வழித்தட விவகாரத்தில் பாகிஸ்தானை நம்ப இயலாது'

  By DIN  |   Published on : 17th March 2019 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AmarinderSingh

  கர்தார்பூர் வழித்தட விவகாரத்தில் பாகிஸ்தானை நம்பப்போவதில்லை என்றும், அந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உள்நோக்கம் கொண்டுள்ளதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
   பஞ்சாபில் காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அமரீந்தர் சிங் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
   கர்தார்பூர் வழித்தட விவகாரத்தில் பாகிஸ்தான் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான கொள்கைகளைக் கொண்டுள்ள பாகிஸ்தான், சீக்கியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறது. அந்நாட்டுக்கு அமைதியை ஊக்குவிக்கும் எண்ணம் கிடையாது. சீர்குலைவை ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் கொள்கை.
   கர்தார்பூர் குருத்வாராவுக்கு செல்வதற்காக பாகிஸ்தான் அனுமதிக்கும் இந்திய யாத்ரீகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அங்கு செல்வதற்கு குறைந்தது 15,000 இந்திய யாத்ரீகர்களாவது அனுமதிக்கப்பட வேண்டும்.
   கர்தார்பூருக்கு செல்ல கடவுச்சீட்டு, நுழைவு இசைவு போன்றவை வேண்டுமென்றால் சிறப்பு வழித்தடத்துக்கான தேவை தான் என்ன? கர்தார்பூர் வழித்தட விவகாரம் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டும். ஏனெனில், பஞ்சாபில் சமீபத்தில் ஐஎஸ்ஐ ஆதரவுடனான பயங்கரவாத அமைப்பு போன்ற குழுக்கள் கைது செய்யப்பட்டன என்று அமரீந்தர் சிங் பேசினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai