சுடச்சுட

  

  கோவாவில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் மாண்ட்ரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக சிவசேனை அறிவித்துள்ளது.
   2 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதேநாளில், காலியாக உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மாண்ட்ரம் சட்டப்பேரவை காங்கிரஸ் எம்எல்ஏ, பாஜகவுக்கு சென்றதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
   இந்நிலையில், கோவாவில் போட்டியிடுவது குறித்து, சிவசேனை கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், " கோவாவில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளிலும், மாண்ட்ரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளோம்.
   கட்சியின் மாநில தலைவர் ஜித்தேஷ் காமத், வடக்கு கோவா தொகுதியில் போட்டியிடுகிறார். தெற்கு கோவா தொகுதியில், கட்சியின் துணைத் தலைவர் பிரபுதேசாய் நாயக் போட்டியிடுகிறார்' என்றார்.
   எனினும் மாண்ட்ரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுபவர் குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.
   கோவாவில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளும் இப்போது பாஜக வசம் உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai