சுடச்சுட

  

  சவால் அளிக்கும் தொகுதியில் திக்விஜய் சிங் போட்டியிட வேண்டும்: கமல் நாத்

  By DIN  |   Published on : 17th March 2019 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kamalnath

  வரும் மக்களவை தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங் போட்டியிட விரும்பினால், சவால் அளிக்கும் தொகுதியை தேர்ந்தெடுத்து அங்கு போட்டியிட வேண்டும் என மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் வரும் மக்களவை தேர்தலில் கடினமான தொகுதியை தேர்வு செய்து போட்டியிட வேண்டும். கடந்த 35 ஆண்டுகளாக சில தொகுதிகளில் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. இதுபோன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அவர் போட்டியிட வேண்டும் என்றார்.
   இதனிடையே காங்கிரஸ் கட்சியினர் கூறியதாவது:
   கடந்த 1989ஆம் ஆண்டுக்கு பிறகு போபால், இந்தூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. குறிப்பாக, போபால் தொகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா காங்கிரஸ் சார்பில் 1984ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு, அங்கு காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை என்று தெரிவித்தனர்.
   இதனை மேற்கோள் காட்டி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்நாத், இதுபோன்ற சவால் அளிக்கும் தொகுதிகளில் ஒன்றை திக்விஜய் சிங் தேர்ந்தெடுத்து போட்டியிட வேண்டும்.
   மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்னும் 3 அல்லது 4 நாள்களில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
   மத்தியப் பிரதேச முதல்வரான கமல்நாத், வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சிந்த்வாரா சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இத்தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வு செய்தால்தான் அவர் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வராக நீடிக்க இயலும்.
   எனவே, தற்போது சிந்த்வாரா தொகுதிக்கு 2 நாள் பயணமாக தேர்தல் பிரசாரத்துக்காக வந்தடைந்த கமல்நாத், அங்கு 11 பேரணிகளை தொடங்கி வைத்தார். இடைத்தேர்தல் பணிகள் அனைத்தும் அவரது மகன் நகுல் நாத் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
   கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது.
   முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்ற போதிலும், 2018ஆம் ஆண்டு தேர்தலில் அவர் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடவில்லை. இதன் காரணமாக, சிந்த்வாரா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீபக் சக்úஸனா, கமல்நாத் போட்டியிடும் வகையில் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai