சுடச்சுட

  

  திருமண அழைப்பிதழில் பாஜகவுக்கு வாக்கு கேட்டு வாசகம்: திருமண வீட்டாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 17th March 2019 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mi

  டேராடூன்: திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டி திருமண அழைப்பிதழ் அடித்த திருமண வீட்டாரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

  மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உட்பட்டு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிகோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதிஷ் சந்திரா சோஷி. கோசாலை நடத்தி வரும் அவர், தனது மகன் ஜீவனின் திருமண அழைப்பிதவில் வழக்கம்போல் இல்லாமல் வித்தியமான வாசகத்தை அச்சிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கியுள்ளனர். அதில், திருமணத்திற்கு மொய், பரிசுப் பொருட்கள் போன்ற எந்த அன்பளிப்பும் வேண்டாம். அதற்கு பதிலாக ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

  இது குறித்து மாவட்ட தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரை கவனத்தில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையர், ஜெகதீஷ் சந்திராவுக்கு திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கம் வேண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

  இந்நிலையில், மாவட்ட தேர்தல் ஆணையரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் ஜெகதீஷ் சந்திரா. அதில், தான் ஒரு சாதாரண மனிதன் என்றும் பெரிய அரசியல்வாதி அல்ல. இந்த திருமண அழைப்பிதழில் உள்ள வாசகத்துக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

  உத்தரகாண்டில் வாக்குப்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜீவனின் திருமணம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai