சுடச்சுட

  

  தெலங்கானா: 8 தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

  By DIN  |   Published on : 17th March 2019 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலையொட்டி, தெலங்கானா மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இங்கு மொத்தம் 17 தொகுதிகள் உள்ளன.
   தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக உள்ள ரேவந்த் ரெட்டி, மால்காஜ்கிரி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
   முன்னாள் எம்.பி.க்கள் ரமேஷ் ரத்தோத், பொரிகா பல்ராம் நாயக் மற்றும் மதன் மோகன் ராவ், பொன்னம் பிரபாகர், சந்திரசேகர், கனி அனில் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
   ஆளும் டிஆர்எஸ் கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு தாவிய எம்.பி.யான கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
   மாநில செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி அதிரடி போக்குடைய தலைவராகக் கருதப்படுகிறார். அவர் தனது பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.
   தத்தளிக்கும் காங்கிரஸ்: தெலங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அக்கட்சி சார்பில் 19 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதிலும் 6 எம்எல்ஏ-க்கள் தற்போது ஆளுங்கட்சிக்கு அணி மாறிவிட்டனர்.
   அதேபோல, சுதீர் ரெட்டி உள்பட மேலும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai