சுடச்சுட

  

  தேர்தல் பாதுகாப்பு: துணை ராணுவப் படையின் 6000 வீரர்களை கோரியது அருணாசல்

  By DIN  |   Published on : 17th March 2019 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்காக, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு துணை ராணுவப் படையின் 60 கம்பெனி படைகளை அருணாச்சலப் பிரதேச தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
   அருணாசலில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக மாநிலம் முழுவதும் 2, 202 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக, துணை ராணுவப் படையின் 60 கம்பெனி படைகளை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. மத்திய அரசின் கீழ் உள்ள துணை ராணுவப் படையில், ஒரு கம்பெனிக்கு குறைந்தபட்சம் 90-100 வீரர்கள் இருப்பர்.
   இதுதொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில், " அருணாசலில் உள்ள 60 பேரவைத் தொகுதிகளிலும், 2000-க்கும் அதிகமான இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதில், 281 வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த இடங்களில் உள்ளன. 662 வாக்குச்சாவடிகள் பிரச்னை நடைபெற வாய்ப்புள்ள இடங்களில் உள்ளன. அதனால், தேர்தல் நேரத்தில் எவ்வித அசம்பாவிதமும் நேராமல், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு துணை ராணுவ படையின் 60 கம்பெனி படைகளை அளிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
   ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், மாநில காவல் துறையின் காவலர் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்பட 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதுமட்டுமன்றி, தேவையான வாக்குச்சாவடிகளில், தேர்தல் நடைமுறைகளை பதிவு செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன' என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai