சுடச்சுட

  

  தேர்தல்: போலீஸ் பாதுகாப்பைத் துறந்தார் சுமித்ரா மஹாஜன்

  By DIN  |   Published on : 17th March 2019 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sumitramahajan

  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும், விதிமுறைகளின்படி தனக்கு அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மக்களவைத் தலைவரும், இந்தூர் தொகுதி எம்.பி.யுமான சுமித்ரா மஹாஜன் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்துக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அந்தத் தேதியிலிருந்து, அரசு அளித்த வாகனங்களைப் பயன்படுத்துவதை நான் நிறுத்திவிட்டேன்.
   எனினும், மக்களவைத் தலைவர் என்ற அரசியல் சாசனப் பதவியில் இருப்பதால், விதிமுறைகளின்படி எனது தனிப்பட்ட வாகனத்தை காவல்துறையினரின் வாகனங்கள் தொடர்ந்து வருகின்றன. மேலும், எனக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
   இந்தூர் மிகவும் அமைதியான நகரம் என்பதால், எனக்கு காவல்துறை வாகனங்களோ, பாதுகாவலர்களோ தேவையில்லை. எனவே, விதிமுறைகளின்படியான அந்தச் சலுகைகள் இனி எனக்குத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் சுமித்ரா மஹாஜன் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai