சுடச்சுட

  

  மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
   இதுகுறித்து மணிப்பூர் காவல்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஷ்ணுபூர் மாவட்டம் நிங்தெளகாங் கடைவீதியில் மணிப்பூர் போலீஸ் கமாண்டோ படையினரும், இந்திய ராணுவ பிரிவுகளில் ஒன்றான கூர்க்கா ரைபிள்ஸ் படையினரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான காங்லிபாக் கம்யூனிஸ்ட் கட்சியை (கேசிபி) சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
   அதேபோல, கிழக்கு இம்பால் மாவட்டம் சனம் சந்த்ரோக் அவாங்க் லெய்சாய் பகுதியிலும், மணிப்பூர் போலீஸ் கமாண்டோ படையினரும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட மற்றொரு இயக்கமான காங்லிபாக் மக்கள் புரட்சிகர கட்சியை (பிரீபாக்) சேர்ந்த தீவிரவாதி ஒருவர் பிடிபட்டார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai