அயோத்தி மத்தியஸ்தர் குழுவிலிருந்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை நீக்க வேண்டும்: அதோக்ஷஜானந்த மகராஜ்

அயோத்தி மத்தியஸ்தர் குழுவிலிருந்து வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று

அயோத்தி மத்தியஸ்தர் குழுவிலிருந்து வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஹிந்து மதத் துறவி அதோக்ஷஜானந்த தேவதீர்த்த மகராஜ் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா நகரில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: அயோத்தி பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய அரசு நியமித்துள்ள மத்தியஸ்தர் குழுவிலிருந்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நீக்கப்பட வேண்டும். காரணம், அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அவர் ஏற்கெனவே மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துவிட்டது.
 எனவே, மத்தியஸ்தர் குழுவில் அவருக்குப் பதிலாக இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறொருவரை நியமிக்க வேண்டும். எனக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. அயோத்தி விவகாரத்தில் அவர் ஏற்கெனவே முன்வைத்த தீர்வுகளை இரு தரப்பினருமே நிராகரித்துவிட்டதால்தான் அவ்வாறு கூறுகிறேன் என்று அதோக்ஷஜானந்த மகராஜ் கூறினார்.
 அயோத்தி விவகாரம் குறித்த மனுக்களை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியஸ்தர் குழுவை அமைத்துள்ளது.
 அதில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஃப். இப்ராஹிம் கலிஃபுல்லா, மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com