உ.பி: 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது: மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் அதிரடி திருப்பமாக பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி போட்டியிடும் 78 தொகுதிகளில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று
உ.பி: 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது: மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் அறிவிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அதிரடி திருப்பமாக பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி போட்டியிடும் 78 தொகுதிகளில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும்,  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்கள் என 75 தொகுதிகளில் இரு கட்சிகளும் போட்டியட உள்ளது. அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி இந்த கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிடுகிறது. 

காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு குடும்பத்தினர் எப்போதும் போட்டியிடும் தொகுதியான ரேபரேலி, அமேதியில் தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் மொத்தம் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜ் பாபர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி போட்டியிடாத இரண்டு தொகுதிகளுக்கு கைமாறாக 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளது. 

மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் முலாயம் சிங் யாதவ், மாயாவதி, அஜித் சிங் உள்ளிட்ட தலைவர்களுக்காக 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியில்லை. அதாவது, சமாஜ்வாதி முன்னாள் தலைவர் முலாயம் சிங் போட்டியிடும் மைன்புரி தொகுதி, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் கன்னாஜ் தொகுதி, மாயாவதி போட்டியிடும் ராஜ் பாப்பார் தொகுதி, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங் மற்றும் ஜெயந்த் சவுத்திரி போட்டியிடும் 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com