நவீன யுகத்தில் வாக்களிக்க வருமாறு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு  போஸ்ட்கார்டு

இந்த நவீன யுகத்தில் வாக்களிக்க வருமாறு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு போஸ்ட்கார்டு மூலம் தகவல் அனுப்ப இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நிர்வாகம் முடிவு செத்துள்ளது.
நவீன யுகத்தில் வாக்களிக்க வருமாறு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு  போஸ்ட்கார்டு

ஷிம்லா: இந்த நவீன யுகத்தில் வாக்களிக்க வருமாறு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு போஸ்ட்கார்டு மூலம் தகவல் அனுப்ப இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்ட நிர்வாகம் முடிவு செத்துள்ளது.

இந்தியாவில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. இம்மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான சிர்மவுர் மாவட்ட நிர்வாகம்தான் இத்தகையதொரு முடிவை எடுத்துள்ளது.  பெரும்பாலும் ஊராகப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சம் வீடுகளுக்கும் இத்தகைய போஸ்ட்கார்டுகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இணை ஆணையாளர் லலித் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்த் போஸ்ட்கார்டில் வரும் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களை உடனடியாக அருகில் உள்ள வாக்குச் சாவடிகளிலோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லலித் ஜெயின் கூறியதாவது:

இல்லத்தில் நடைபெறும் சமூக விழாக்களில் கலந்து கொள்ளுமாறு நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ. போஸ்ட்கார்டுகள் அல்லது வாழ்த்து அட்டைகளை அனுப்புவது என்பது இந்த மாவட்ட மக்களின் மரபாகும். எனவே நாங்களும் இங்குள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் போஸ்ட்கார்டு அனுப்பலாம் என்று முடிவு செய்தோம்.

இந்த மாவட்டத்தில் உள்ள ஷில்லாய், ஷங்ரா மற்றும் பச்சாட் ஆகிய பகுதிகளில் அலைபேசி இணைப்பு கிடைப்பது என்பது கடினம். அஞ்சல் நிலையங்களே தகவல் தொடர்புக்கான ஒரே வழியாகும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று போஸ்ட்காரடை தபால்காரர் கொடுக்கும் போதே இந்தக் கடிதம் வாயிலாக, இணை ஆணையர் உங்களுக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார் என்று சொல்லுவார்.   

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 3.59 லட்சம் வாக்காளர்களுக்கும் போஸ்ட்கார்டுகளை அனுப்பத்  திட்டமிட்டுள்ள அவரது அலுவலகமானது, இதுவரை 25 ஆயிரம் போஸ்ட்கார்டுகளை அனுப்பியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com