ஐஏஎஸ் அதிகாரி மீதான ஹரியாணா முதல்வரின் குறிப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவின் பணித்திறன் குறித்து அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் எழுதிய குறிப்பை ரத்து செய்து பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவின் பணித்திறன் குறித்து அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் எழுதிய குறிப்பை ரத்து செய்து பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலாளர், துறை சார்ந்த அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோர் ஐஎஎஸ் அதிகாரிகளின் பணியை மதிப்பிட்டு ஆண்டுதோறும் மதிப்பீடு வழங்குவது வழக்கம். 
இதில் 2016-ஆம் ஆண்டு விளையாட்டுத் துறை செயலராக இருந்த கேம்காவுக்கு தலைமைச் செயலர் 10-க்கு 8.22 மதிப்பெண் அளித்தார். விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜி 10-க்கு 9.92 மதிப்பெண் அளித்தார். 
ஆனால், முதல்வர் மனோகர் லால் கட்டர் 10-க்கு 9 மதிப்பெண் அளித்ததுடன்,  அசோக் கேம்கா குறித்து அமைச்சர் அனில் விஜி கூடுதலாக மதிப்பீடு அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதல்வரின் இந்த கூடுதல் கருத்து, மத்திய அரசின் கூடுதல் செயலர் பதவிக்கு தான் செல்ல தடையாக இருக்கும் என்று கூறிய கேம்கா, அதனை எதிர்த்து பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கேம்கா குறித்த முதல்வரின் கருத்தை நீக்க உத்தரவிட்டது.
அசோக் கேம்கா, 27 ஆண்டுகால ஐஏஎஸ் அதிகாரி பணியில் 52 முறை பணியிடமாற்றம் பெற்றுள்ளார். 
முன்பு ஹரியாணாவில் டிஎல்எஃப் நிறுவனம், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா இடையிலான நில ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம், அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுடன் பிரச்னையை எதிர்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com