பாதுகாவலர் என்ற சொல் தற்போது எதை உணர்த்துகிறது? பிரதமர் மோடி புதிய விளக்கம்

பாதுகாவலர் என்ற சொல் தற்போது நேர்மை மற்றும் நாட்டுப் பற்று என்ற அர்த்தமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
பாதுகாவலர் என்ற சொல் தற்போது எதை உணர்த்துகிறது? பிரதமர் மோடி புதிய விளக்கம்


பாதுகாவலர் என்ற சொல் தற்போது நேர்மை மற்றும் நாட்டுப் பற்று என்ற அர்த்தமாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இன்று 25 லட்ச பாதுகாவலர்களுடன் உரையாடியதாக பாஜக தெரிவித்தது. இந்த உரையாடலில் அவர் பேசுகையில், 

"என்னை எதிர்ப்பவர்களுக்கு என் பெயரை குறிப்பிட்டு நேரடியாக விமரிசிப்பதற்கு தைரியம் இல்லை. மாறாக பாதுகாவலர்களை குறிவைத்து விமரிசிக்கின்றனர். உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவது தான் வாரிசுகளுக்கு பழக்கம். அவர்களுள் யாரேனும் பிரதமர் ஆனாலும், அவர்கள் தொடர்ந்து உழைக்கும் மக்களை அவமரியாதை செய்வார்கள்" என்றார்.  

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பாதுகாவலனாக இருப்பேன் என்று மோடி பிரசாரம் செய்தார். இதையடுத்து, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டை வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இது நாடு முழுவதும் டிரெண்டிங் ஆனது. 

இதையடுத்து, இதே பாதுகாவலர் என்ற சொல்லை பயன்படுத்தி பிரதமர் மோடி கடந்த 16-ஆம் தேதி டிவிட்டரில் பிரசாரம் மேற்கொண்டார். அதில், உழைக்கும் மக்கள் மற்றும் நாட்டில் நிகழும் அநீதிக்கு எதிரானவர்கள் அனைவரும் பாதுகாவலர்களே என்று கூறி 'நானும் பாதுகாவலன் தான்' என்ற ஹேஷ்டேக்கை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது டிவிட்டர் கணக்கு பெயரின் முன் பாதுகாவலன் என்ற சொல்லை இணைத்தனர்.       

தேசத்தின் பாதுகாவலன் ஒரு திருடன் என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டு மூலம், பாதுகாவலன் என்ற சொல்லை நேர்மறையாக மாற்றி அதன் மூலம் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com