நீரவ் மோடி மனைவி மீது பிடிவாரண்ட்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

நீரவ் மோடியின் 173 ஓவியங்கள் மற்றும் 11 சொகுசு கார்களை உடனடியாக பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நீரவ் மோடி மனைவி மீது பிடிவாரண்ட்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடிக்கு (48) எதிராக லண்டன் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.

அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை விடுத்த கோரிக்கையை ஏற்று லண்டன் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நீரவ் மோடி லண்டனில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்தியாவில் உள்ள அவரது 173 ஓவியங்கள் மற்றும் 11 சொகுசு கார்களை உடனடியாக பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுபோன்று நீரவ் மோடி மனைவி அமி மோடி மீது பிணையில் வெளிவர முடியாது பிடிவாரண்ட் பிறப்பிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com