1952 - 2014 வரை ஒவ்வொரு தேர்தலுக்கும் மத்திய அரசு செய்த செலவு எவ்வளவு? தெரிஞ்சிக்கணுமா??

விரலில் மை வைத்துக் கொண்டு அதனுடன் ஒரு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது ஒன்று மட்டுமே நமது ஜனநாயகக் கடமை என்று நினைத்திருக்கிறார்கள் இளைஞர்களில் பலர்.
 1952 - 2014 வரை ஒவ்வொரு தேர்தலுக்கும் மத்திய அரசு செய்த செலவு எவ்வளவு? தெரிஞ்சிக்கணுமா??

விரலில் மை வைத்துக் கொண்டு அதனுடன் ஒரு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது ஒன்று மட்டுமே நமது ஜனநாயகக் கடமை என்று நினைத்திருக்கிறார்கள் இளைஞர்களில் பலர்.

ஆனால், உண்மையிலேயே நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட நல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளோமா? சரியான வேட்பாளருக்கே நமது வாக்கினை செலுத்தியுள்ளோமா என்றெல்லாம் ஆராய்வது வெகு சிலரே.

இதுவரை 16 முறை இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்குக் கொடுக்கப்படும் நல் வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பது குறித்து இன்னமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில்தான் இந்திய அரசில்வாதிகள் மக்களை வைத்துள்ளனர்.

சரி, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று சொல்லும் போதுதான் பொதுத் தேர்தல்களுக்கு நமது மத்திய அரசுக்கு எவ்வளவுதான் செலவு செய்கிறது? என்பது குறித்த கேள்வியும் எழுந்தது. அது பற்றி தேடியதில் கிடைத்திருக்கும் தகவல்..

சரி பாருங்கள் இந்த பட்டியலை..
 

தேர்தல் நடந்த ஆண்டுசெலவான தொகை ரூபாயில்
1952
10,45,00,000
1957
5,90,00,000
1962
7,32,00,000
1967
10,79,69,000
1971
11,60,87,450
1977
23,03,68,000
1980
54,77,39,000
1984-85
81,54,34,000
1989
154,22,00,000
1991-92
359,10,24,679
1996
597,34,41,000
1998
666,22,16,000
1999
947,68,31,000
2004*
1,016,08,69,000
2009#
1,114,38,45,000
2014
3,87,034,56,024

இதுதான், 1952 முதல் 2014 பொதுத் தேர்தல் வரை நமது மத்திய அரசு தேர்தலுக்காக செலவிட்ட தொகையாகும். இது வெறும் மத்திய, மாநில அரசுகள் செய்த செலவு மட்டுமே, இதில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் செய்த செலவு அடங்காது.

இந்த செலவு முழுக்க முழுக்க தேர்தல் அலுவலர்களை பணிக்கு அமர்த்துவது, வாக்குச் சீட்டுகள் தயாரிப்பது, தேர்தலை நடத்துவதற்கு ஆகும் செலவு, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட செலவுகள் அடங்கும்.

*இந்த செலவுத் தொகை என்பது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செலுத்திய பங்குத் தொகையும் அடங்கும். 2004 மக்களவைத் தேர்தலுடன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளும் இதில் அடங்கும்.

#2009 மக்களவைத் தேர்தலை நடத்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தொகையும் அடங்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com