சட்டப்பேரவைத் தேர்தல்: சிக்கிம், அருணாச்சல பிரதேச வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

சட்டப்பேரவைத் தேர்தல்: சிக்கிம், அருணாச்சல பிரதேச வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அருணாச்சல பிரதேசத்துக்கான 6 வேட்பாளர்கள் மற்றும் சிக்கிம் மாநிலத்துக்கான 12 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அருணாச்சல பிரதேசத்துக்கான 6 வேட்பாளர்கள் மற்றும் சிக்கிம் மாநிலத்துக்கான 12 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. 

17-ஆவது மக்களவைத் தேர்தலோடு அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 11-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. இதில் 54 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மீதமுள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 32 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. அங்கு கிராந்திகாரி கட்சியுடனான கூட்டணி முடிவுக்கு வந்த நிலையில், 32 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து, சிக்கிம் தேர்தலுக்காக 12 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் பாஜக இன்று வெளியிட்டது.   

இந்த வேட்பாளர் பட்டியலுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையிலான அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com