புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம்?

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் தேர்வு செய்யப்படவுள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம்?

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் தேர்வு செய்யப்படவுள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  இவற்றால் தமிழகத்தில் அக்கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்  இன்னும் வெளியாகவில்லை.       

இந்நிலையில் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் புதுச்சேரிக்கு வந்து இங்குள்ள கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக உள்ள வைத்திலிங்கம்,  ஏற்கெனவே 1980 முதல் 2006 வரை நெட்டப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 7 முறையும்,  2011,  2016 தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியிலும் வென்று, தொடர்ந்து 9 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது தாத்தா வைத்திலிங்கம் ரெட்டியார்,  பிரெஞ்சு ஆதிக்கத்தில் புதுவை இருந்த போது நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் மேயராக இருந்தவர். இவரது தந்தை வெங்கடப்ப ரெட்டியார், புதுவை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். மேலும், வைத்திலிங்கம் புதுவையில் 2 முறை முதல்வராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் முதல்வர் நாராயணசாமி சபாநாயகர் வைத்திலிங்கத்தை வியாழனன்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com