அத்வானியின் எம்பி தொகுதியும் தற்போது பறிக்கப்பட்டது: காங்கிரஸ் விமரிசனம்

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி விமரிசித்துள்ளது.
அத்வானியின் எம்பி தொகுதியும் தற்போது பறிக்கப்பட்டது: காங்கிரஸ் விமரிசனம்


பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி விமரிசித்துள்ளது. 

17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்தது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் பெயர் இடம்பெறவில்லை. வழக்கமாக அவர் போட்டியிடும் குஜராத் காந்திநகர் தொகுதியில் இந்த முறை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். 

இதை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், 

"லால் கிருஷ்ணா அத்வானி முதலில் வலுக்கட்டாயமாக மார்கதர்ஷ குழுவுக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவரது நாடாளுமன்றத் தொகுதியும் பறிக்கப்பட்டுவிட்டது. பிரதமர் மோடி மூத்தவர்களையே மதிக்காத நிலையில், மக்களின் நம்பிக்கையை அவர் ஏன் மதிக்கப்போகிறார்?  பாஜகவில் இருந்து விடுபட்டு நாட்டை பாதுகாக்க வேண்டும்" என்றார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com