கிராம வளர்ச்சியை மேம்படுத்த கூட்டாட்சி அமைப்பு தேவை: அருண் ஜேட்லி

கிராம வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் போன்று மத்திய, மாநில அரசுகள் அங்கம் வகிக்கும் கூட்டாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்
கிராம வளர்ச்சியை மேம்படுத்த கூட்டாட்சி அமைப்பு தேவை: அருண் ஜேட்லி


கிராம வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் போன்று மத்திய, மாநில அரசுகள் அங்கம் வகிக்கும் கூட்டாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் காணொலி மூலம் தெரிவித்ததாவது:
ஜிஎஸ்டி கவுன்சில் மிகச் சிறந்த கூட்டாட்சி அமைப்பாகும். இதுவரை நடைபெற்றுள்ள 34 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில், பல்வேறு முக்கிய முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன. இதனால், வணிகர்களும், மக்களும் பெரிதும் பயனடைந்துள்ளனர். புதிய இந்தியாவும் உருவாகி வருகிறது.
நாட்டில் மத்திய, மாநில அரசுகளை இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டாட்சி அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில், வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதே போன்று, விவசாயத்துறை, கிராம வளர்ச்சி, சுகாதாரத்துறை ஆகியவற்றிலும் கூட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. 
மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துக்காக நிதிகள் ஒதுக்கியும், திட்டங்களைத் தீட்டியும் வருகின்றன. மாநிலங்களும் மருத்துவமனைகளை அமைத்து வருகின்றன. பெரும்பாலான துறைகளில் மத்திய, மாநில அரசுகள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. 
நாட்டிலுள்ள வளங்களைத் திறம்பட உபயோகிக்கவும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் கூட்டாட்சி அமைப்புகள் அவசியம் ஆகும். இது ஏழை மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இதனை நடைமுறைப்படுத்த பாஜக உறுதிகொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சரின் தலைமையில் இயங்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com