21 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸை புறம்தள்ளிய மம்தா!

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கிய மம்தா, 21 ஆண்டுகளுக்கு பிறகு கட்சியின் பெயரில் இருந்த காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். 

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி 1998-இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து,  21 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கட்சியின் பெயரில் இருந்து காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் லோகோவில் தற்போது திரிணமூல் என்று மட்டும் தான் உள்ளது.  

கடந்த ஒருவாரமாக இந்த பெயர் தான் பயன்பாட்டில் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் கொடிகள், பதாகைகள் என அனைத்தில் இருந்தும் காங்கிரஸ் தற்போது நீக்கப்பட்டுவிட்டது. 

எனினும், தேர்தல் ஆணையத்தின் பதிவில் திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரே நீடிக்கும் என்று கட்சியின் நம்பகத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com