எனது தந்தைக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது: பி.ஒய்.ராகவேந்திரா

எடியூரப்பா, பாஜக தலைவர்கள் பலருக்கு ரூ.1,800 கோடி அளவுக்கு பணம் கொடுத்ததாகவும், அது குறித்த டைரியை ஆதாரமாக சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
எனது தந்தைக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது: பி.ஒய்.ராகவேந்திரா

பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, கர்நாடகத்தின் முதல்வராக இருந்த போது பாஜக தலைவர்கள் பலருக்கு ரூ.1,800 கோடி அளவுக்கு பணம் கொடுத்ததாகவும், அது குறித்த டைரியை ஆதாரமாக சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டைரியில் இருப்பதாகக் கூறப்படும் கையெழுத்து, ஆவணங்கள், கையெழுத்துபிரதிகள் அனைத்தும் இட்டுக்கட்டியவை, போலியானவை என்பதை வருமான வரித் துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தீயநோக்கம் கொண்ட, வன்ம எண்ணம் கொண்ட பிரசாரங்களில் ஈடுபட்டு எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் லாபம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது. காங்கிரஸ் கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்ற, பொருந்தாத, பொய்யானவையாகும். இது முடிந்துபோன அத்தியாயம் என்று எடியூரப்பா பதிலடி அளித்தார்.

இந்நிலையில், எடியூரப்பா மகன் பி.ஒய்.ராகவேந்திரா கூறுகையில்,

இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என் தந்தை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுதான். அந்த குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து பிரச்னைகளும் எதிர்கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டது. ஏனென்றால் அதற்கு இரு ஆதாரங்களும் உள்ளது.

முதலாவது எனது தந்தைக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. 2-ஆவது ஒவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்றுள்ள கையெழுத்து யாருடையது? இந்த போலி ஆதாரத்தை ஏற்படுத்தியவருக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது என்று நினைக்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com