தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவினர் காவலாளி பணிக்குச் செல்லலாம்: மாயாவதி கிண்டல்

மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோல்வி அடையும். அதன்பிறகு, பாஜகவினர் காவலாளிகளாகப் பணிபுரியலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவினர் காவலாளி பணிக்குச் செல்லலாம்: மாயாவதி கிண்டல்


மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோல்வி அடையும். அதன்பிறகு, பாஜகவினர் காவலாளிகளாகப் பணிபுரியலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்கள் திருடப்பட்டது குறித்து பாஜக கவலைப்படவில்லை. வேலைவாய்ப்பின்மை, வறுமை, விவசாயிகளின் அவலநிலை ஆகியவை தொடர்பான அறிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாஜக அரசு மறைத்து வருகிறது. மக்களிடம் வாக்கு பெறுவதை மட்டுமே பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய கட்சியைச் சேர்ந்தவர்கள், நாட்டின் காவலர்களாக இருப்பது அவசியமா?
பாஜக தலைவர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு நானும் நாட்டின் காவலர் என்று கூறி வருகின்றனர். ஆனால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற ஒருசிலர், மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் மக்கள் பணியிலேயே இருந்துவிடலாமா அல்லது காவலாளியாக மாறி விடலாமா என்று சிந்தித்து வருகின்றனர்.
பாஜகவினர் தங்களை எவ்வாறு வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு அவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் காவலர்களாக அவர்கள் விளங்க வேண்டும். அதையே மக்களும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.
பாஜக தலைவர்களும், அதன் நிர்வாகிகளும் அவர்களுக்குப் பிடித்த எதையும் செய்யலாம். ஆனால், அதற்காக அரசமைப்புச் சட்டத்தினையும், அரசமைப்பு அளித்துள்ள பதவியையும் அவர்கள் அவமதிக்கக் கூடாது.  பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பதவிகளுக்கு எந்தவிதக் களங்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது. தேர்தலில் தோல்வி அடைந்தபிறகு, அவர்கள் அனைவரும் காவலாளி பணியை மேற்கொள்ளலாம் என்று அவர் பதிவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com