பகுஜன் சமாஜ் கட்சியின் முதலாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.


உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 11 வேட்பாளர்கள் அடங்கிய முதலாவது வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 
உத்தரப் பிரதேத்தில் சமாஜவாதி-பகுஜன் சமாஜ்- ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. 
இந்த தேர்தலில், ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில் பகுஜன் சமாஜ் செயல்பட்டு வருகிறது. முதலாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்ட அடுத்த நாளில்,  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 11 தொகுதிகளில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தானிஷ் அலிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அம்ரோஹா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
யோகேஷ் வர்மா, புலந்த்சாஹர் தொகுதியிலும், மீரட் தொகுதியில் ஹசி முகமது யாகூப்,  ஆக்ரா தொகுதியில் மனோஜ் குமார் சோனி, அஜீத் பலியான், அலிகார் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com