பயங்கரவாதத் தாக்குதல்: சாம் பிட்ரோடா கருத்துக்கு ராகுல் பதிலளிக்க வேண்டும்

இந்திய விமானப் படை நிகழ்த்திய தாக்குதலை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று
பயங்கரவாதத் தாக்குதல்: சாம் பிட்ரோடா கருத்துக்கு ராகுல் பதிலளிக்க வேண்டும்

இந்திய விமானப் படை நிகழ்த்திய தாக்குதலை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி, அழித்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அயலகப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா இரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவிக்கையில், "புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாலாகோட்டில் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடாது; இதுபோன்ற தாக்குதல்கள் எல்லா நேரத்திலும் நடக்கும். கடந்த 2008-இல் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட் டணி அரசு, விமானப் படையை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அது சரியான அணுகுமுறையல்ல' என்றார்.
இந்தக் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இவரது கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவர், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி தங்களது வாக்கு வங்கியை நன்கு அறியும். எனவே, தேர்தல் நேரத்தில் மக்களை சாந்தப்படும் முயற்சிகளில் அக்கட்சி ஈடுபடுவது வழக்கம். எனினும், நாட்டு நலனைக் காட்டிலும் கட்சி நலன் முக்கியமா? வீரர்களுடைய குடும்பத்தினரின் துயரத்தில் அரசியல் செய்ய வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து கூறுவார்கள். ஆனால், அது அவர்களின் சொந்தக் கருத்து என்று கூறி காங்கிரஸ் கட்சி நழுவி விடும். மேலும், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கும் தலைவர்களுக்கு எதிராக அக்கட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. ஏனெனில், இதுபோன்று கருத்து தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர் என்று அமித் ஷா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com