பாஜக துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக மத்திய அமைச்சர் உமா பாரதி சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக மத்திய அமைச்சர் உமா பாரதி சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி நாடாளுமன்ற தொகுதி எம்பி மற்றும் மத்திய குடிநீர், வடிகால்துறை அமைச்சருமான உமா பாரதி, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் ஆலோசனைக் குழு கூட்டத்திலும் அக்கட்சி தலைமையிடம் தனது கருத்தை உமா பாரதி வலியுறுத்தினார்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி சனிக்கிழமை நியமிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com