மேற்கு வங்கம்: ராகுல் பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

மேற்கு வங்கம்: ராகுல் பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள், இருக்கை வசதி இல்லை எனக்கூறி நாற்காலிகளை வீசியும், தடுப்பு வேலிகளை

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள், இருக்கை வசதி இல்லை எனக்கூறி நாற்காலிகளை வீசியும், தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
மால்டா மாவட்டம் சஞ்சால் நகரில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த அந்த மாநில காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேரணியை கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். 
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் காத்திருந்தனர். தொண்டர்கள் நிற்பதற்காக தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கால்கடுக்க நின்றிருந்த தொண்டர்கள், அமருவதற்கு இருக்கை வசதி செய்யாததை கண்டித்து திடீரென, மாநில நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர். 
அவர்களை சமாதானப்படுத்த கட்சி நிர்வாகிகள் முயன்றனர். ஆனால், சமாதானமடையாத தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு, முன்புறம் விஐபிக்கள் அமரும் பகுதிக்குள் தடுப்புவேலியை உடைத்துக் கொண்டு நுழைந்தனர். அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்தனர். இதனால், அப்பகுதி போர்களம் போல காட்சியளித்தது. 
கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் அமர்ந்திருந்த பகுதியிலும் புகுந்து தொண்டர்கள் தகராறில் ஈடுபட்டனர். 
போலீஸார் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அமளியில் ஈடுபட்ட தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். 
தொண்டர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி பிகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com