முலாயம் சிங்,  அகிலேஷ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் 

முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முலாயம் சிங்,  அகிலேஷ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் 

புது தில்லி: முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ்  மற்றும் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாகி சொத்துக் குவித்த வழக்கினை சி.பி.ஐ. கடந்த 2007 -ஆம் ஆண்டு பதிவு செய்தது.

இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது .

இந்த மனுவானது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது இரண்டு வாரங்களுக்குள் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com