பரம்பரைக் கட்சியான காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாமல் போகும்: அருண் ஜேட்லி

"குடும்ப அரசியலைத் தொடரும் காங்கிரஸூம், இதர பரம்பரைக் கட்சிகளைப் போலவே இருக்கும் இடம் தெரியாமல் போகும்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். 
பரம்பரைக் கட்சியான காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாமல் போகும்: அருண் ஜேட்லி

"குடும்ப அரசியலைத் தொடரும் காங்கிரஸூம், இதர பரம்பரைக் கட்சிகளைப் போலவே இருக்கும் இடம் தெரியாமல் போகும்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். 
இதுதொடர்பாக அவர் தனது வலைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது: 
சமீப காலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். "நான் என்ன செய்வது? அவர் யார் பேச்சையும் கேட்பதில்லை. மே 24-ஆம் தேதி வரை காத்திருப்போம். அதன் பிறகு நமது அரசியலை தொடங்குவோம். கட்சியிலிருந்து விலகலாம் என எண்ணுகிறேன். நமது தேர்தல் பிரசார திட்டங்கள் யாவும் பின்னடைவை சந்தித்துள்ளன' என்று அவர்கள் பேசிக் கொள்கின்றனர்.
ஒரு பரம்பரைக் கட்சியாக இருப்பதற்கான விலையை காங்கிரஸ் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது. 
பரம்பரைக் கட்சிகள் யாவும் ஒரு சில தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களின் பலத்தாலேயே நீடித்து வந்திருக்கின்றன. அந்தத் தலைவர்களுக்கு மக்களைக் கவரும் தன்மை, அவர்களை புரிந்துகொள்ளும் திறன், அரசியல் திறமை போன்றவை இருக்கும் பட்சத்தில் கட்சி மிகப்பெரும் வெற்றியை பெறுகிறது. அவரின் பின்னால் கட்சியை கொண்டு செல்லும் உந்துதல் கிடைக்கிறது.
ஆனால், அதுபோன்ற பரம்பரைக் கட்சிகளுக்கென ஒரு குறைபாடு உள்ளது. ஒரு கட்டத்தில் அவை இருக்கும் இடம் தெரியாமல் போகும். சம்பந்தப்பட்ட கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த தலைவருக்கு அதுபோன்ற திறமை இல்லாத பட்சத்தில் அந்தக் குடும்பத்தைச் சுற்றியிருக்கும் தலைவர்கள் விரக்தியடைகின்றனர். இது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியுமா? 
பரம்பரை கட்சிகளில் திறமையான நபர்களுக்கு குறுகிய அளவே இடமளிக்கப்படுகிறது. ஏனெனில், அதன் தலைவர்கள் திறமையான நபர்களைக் கண்டு அச்ச உணர்வு கொள்கின்றனர். இந்த அச்ச உணர்வுதான் தற்போது காங்கிரஸ் தலைமைக்கு இருக்கிறதா? அதனால் தான் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் தரம்தாழ்ந்து விமர்சிக்கிறாரா? என்று அந்தப் பதிவில் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com