மாயாவதி ஏன் போட்டியிடவில்லை?: அமித் ஷா கேள்வி

"பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மாயாவதி ஏன் போட்டியிடவில்லை?: அமித் ஷா கேள்வி

"பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
வரும் மக்களவைத் தேர்தல், வளர்ச்சியை முன்னெடுத்துள்ள பாஜகவுக்கும், ஊழல் மிகுந்த "மகா கூட்டணி'க்கும் இடையேயான போட்டியாகும். தேர்தலில் போட்டியிட எந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் விருப்பமில்லை. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பிரதமர் மோடி தோற்க வேண்டுமென விரும்புகிறார். ஆனால், தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
அதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கூட தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில், ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும், அவர்களிடம் பிரதமர் ஆகும் தகுதியுடைய தலைவர்கள் எவருமில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, நாடு முழுவதும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் பாஜக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை. விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டம் (பிஎம்-கிசான்), ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பயன்தரக் கூடிய திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து சமூகத்தினருக்குமான வளர்ச்சியை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது.
தகுந்த பதிலடி: உரி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுப் பகுதியில் துல்லியத் தாக்குதலையும், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் உள்ள பாலாகோட் பகுதியிலும் பாஜக ஆட்சியில் தகுந்த பதிலடிகள் கொடுக்கப்பட்டன. பிரதமர் மோடியின் திறமை இதிலிருந்து புலனாகிறது. 
ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர் ராணுவத்தின் வலிமை குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். வாக்கு வங்கி அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்பு அமெரிக்காவும், இஸ்ரேலும் மட்டுமே தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தன. தற்போது, பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மட்டுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
நாட்டின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் முன் நிறுத்தி மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும். பிரதமராக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொள்ள தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com