4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் விமானப் படையில் இணைப்பு

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையில் திங்கள்கிழமை முறைப்படி
சண்டீகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட சினூக் ரக ஹெலிகாப்டர் அருகே நிற்கும் விமானப் படையினர்.
சண்டீகரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட சினூக் ரக ஹெலிகாப்டர் அருகே நிற்கும் விமானப் படையினர்.


அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையில் திங்கள்கிழமை முறைப்படி இணைக்கப்பட்டன.
விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து, புதிதாக 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களை வங்குவதற்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட 4 ஹெலிகாப்டர்கள், கடந்த பிப்ரவரியில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் என அதிக எடை கொண்ட பொருள்களை ஏற்றிச் செல்லக் கூடிய திறன் கொண்ட சினூக் ஹெலிகாப்டர்கள், சண்டீகர் விமானப் படை தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியையொட்டி, விமானப் படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நமது நாடு பலவகையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், சினூக் ரக ஹெலிகாப்டர், இந்திய விமானப் படைக்கு மிகவும் அவசியமானதாகும். கடல் மட்டம் முதல் மிக உயரமான மலைப் பகுதி வரையிலான தளங்களில் விமானப் படை இயங்குகிறது.
சினூக் ரக ஹெலிகாப்டரில் 11 டன் வரையிலான பொருள்களை எடுத்துச் செல்ல முடியும். ராணுவ போக்குவரத்துக்கு மட்டுமன்றி, பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், போர்க்காலங்களில் ஒட்டுமொத்தமாக அகதிகளை வெளியேற்றுவதற்கும், நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம்.
மேலும், இந்த ஹெலிகாப்டரை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 12 விமானிகள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளனர் என்றார் தனோவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com