காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: இறுதி வடிவம் கொடுக்க செயற்குழு தீவிரம்

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்க திங்கள்கிழமை அக்கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 
புது தில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற செயற்குழு நிர்வாகிகள். 
புது தில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற செயற்குழு நிர்வாகிகள். 


மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்க திங்கள்கிழமை அக்கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 
மக்களவைத் தேர்தலையொட்டி  காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப்பணியில் கட்சியின் உயர்மட்டக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், இதற்கான இறுதி வடிவம் கொடுக்கும் பணியில், கட்சியின் செயற்குழுக்குழு நிர்வாகிகளான கட்சித்தலைவர் ராகுல் காந்தி,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் அகமது படேல், பிரியங்கா வதேரா, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தினர். 
முன்னதாக, கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் தலைவர் ப.சிதம்பரம்  தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது. 
மக்களைவை தேர்தலையொட்டி மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளையும், ஆலோசனைகள் மற்றும் விருப்பங்களை அக்கட்சியினர் சேகரித்துக் கொண்டனர். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக சேர்க்கப்பட உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். 
அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிக்கை வெளியாகும்போது, கட்சி இணையதளத்திலும் அது வெளியிடப்படும். அனைத்துத்தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும் என கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com