ரூ.72 ஆயிரம் திட்டம் வறுமைக்கு எதிரான துல்லியத் தாக்குதல்: ராகுல் முழக்கம்

ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் வறுமைக்கு எதிரான துல்லியத் தாக்குதல் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
ரூ.72 ஆயிரம் திட்டம் வறுமைக்கு எதிரான துல்லியத் தாக்குதல்: ராகுல் முழக்கம்

ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் வறுமைக்கு எதிரான துல்லியத் தாக்குதல் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், செவ்வாய்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஏழ்மையில் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயாக ஆண்டுக்கு தலா ரூ.72,000 வழங்கும் திட்டம் வறுமைக்கு எதிரான துல்லியத் தாக்குதல் நடவடிக்கை ஆகும். இந்த 21-ஆம் நூற்றாண்டில் குறைந்தபட்ச வருவாய் வரையறை திட்டம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி யாரும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடாது. அந்த நல்ல நோக்கத்தில் தான் இந்த திட்டமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் அரசால் செல்வந்தர்களுக்கு பணம் வழங்க முடியும் என்றால், காங்கிரஸ் அரசால் ஏழைகளுக்கும் பணம் வழங்க முடியும் என்று தெரிவித்தார். 

முன்னதாக, இந்தியாவில் 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், மிகவும் ஏழ்மையில் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாயாக ஆண்டுக்கு தலா ரூ.72,000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும். அந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

இதனால் 5 கோடி குடும்பங்களும், 25 கோடி மக்களும் பயன்பெறுவார்கள். இந்தியாவில் இருந்து வறுமை ஒழிக்கப்படும். 

கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகினர். அவர்கள் அனைவருக்கும் தகுந்த நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல், திங்கள்கிழமை வாக்குறுதி அளித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com