Enable Javscript for better performance
சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான தகவலை தெரிவிக்க உள்ளேன்: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

    

    சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான தகவலை தெரிவிக்க உள்ளேன்: பிரதமர் மோடி

    By DIN  |   Published on : 27th March 2019 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi


    புது தில்லி: இந்தியா முழுவதும் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. 

    மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகலில் நாட்டு மக்களுடன் உரையாட உள்ளார்.

    இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பகல் 11.45 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளேன். மிக முக்கியத் தகவல் அடங்கிய செய்தியுடன் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai