Enable Javscript for better performance
பயணச்சீட்டில் பிரதமரின் புகைப்படம்: ரயில்வே, விமானத்துறை அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    பயணச்சீட்டில் பிரதமரின் புகைப்படம்: ரயில்வே, விமானத்துறை அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

    By DIN  |   Published on : 27th March 2019 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    election-commission-759

     

    பயணச்சீட்டில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றது தொடர்பாக மத்திய ரயில்வே மற்றும் விமானத்துறை அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது.

    மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    இதையடுத்து ரயில்வே மற்றும் விமானங்களில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் இடம்பெற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மார்ச் 15-ஆம் தேதி புகார் தெரிவித்தது.

    எனவே இவ்விகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோருக்கு, பயணச்சீட்டு, பெட்ரோல் நிலையங்கள் மற்றும் ரயில், விமான நிலையங்களில் இடம்பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கும் விவகாரம் தொடர்பாக அடுத்த 3 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai