Enable Javscript for better performance
பாஜக-வில் ஐக்கியமான கூட்டணிக் கட்சி- Dinamani

சுடச்சுட

    
    Two_MGP_MLAs_join_BJP

     

    கோவா மாநிலத்தில் கூட்டணிக் கட்சியான மஹாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி பாஜக-வில் புதன்கிழமை ஐக்கியமானது.

    முன்னதாக, மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவா புதிய அரசுக்கு அக்கட்சி ஆதரவு அளித்த நிலையில் தற்போது பாஜகவிலேயே இணைந்துள்ளது.

    3-ல் 2 பங்கு எம்எல்ஏ-க்களின் ஆதரவிருந்தால் முறைப்படி இணையலாம் என்ற நிலையில், மொத்தம் 3 எம்எல்ஏ-க்களை கொண்டிருந்த எம்ஜிபி கட்சியின் மனோகர் அஜ்கனோகர் மற்றும் தீபக் புஷ்கர் ஆகிய 2 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் தங்கள் இணைத்துக்கொண்டனர்.

    இதற்கான அறிவிப்பை அம்மாநில ஆளுநரிடம் முறைப்படி வழங்கினர். இதன்மூலம் கோவா பாஜக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai