Enable Javscript for better performance
புரி ஜெகந்நாதரையும் விட்டு வைக்காத தேர்தல் கலவரம்- Dinamani

சுடச்சுட

    
    sambith_puri


    புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரம் மேற்கொண்டதாக காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சம்பித் பத்ரா, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக, தனது கையில் புரி ஜெகந்நாதர் சிலையை வைத்திருந்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகு, சம்பித் பத்ரா தனது கையில் புரி ஜெகந்நாதரின் சிலையை வைத்துக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்தியாவில் ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மக்களவைத்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai