Enable Javscript for better performance
ராகுலுடன் சந்திப்பு: காங்கிரஸில் இணைந்த 'ரங்கீலா' நடிகை!- Dinamani

சுடச்சுட

    

    ராகுலுடன் சந்திப்பு: காங்கிரஸில் இணைந்த 'ரங்கீலா' நடிகை! 

    By DIN  |   Published on : 27th March 2019 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Urmila_Matondkar_joins_Congress

     

    90-களில் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஊர்மிளா மடோன்கர் (45). குறிப்பாக ராம்கோபால் வர்மாவின் புகழ்பெற்ற ரங்கீலா, ஜுடாய் மற்றும் பியார் துனே க்யா கியா போன்ற பல பாலிவுட் வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

    ஹிந்தி மட்டுமல்லாது மராத்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் (இந்தியன்) உள்ளிட்ட இதர மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்காக 7 முறை பரிந்துரைக்கப்பட்டு ஒரு முறை வென்றுள்ளார். 

    இந்நிலையில், நடிகை ஊர்மிளா மடோன்கர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் உடன் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவித்தார்.  

    ஏற்கனவே, தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளான நக்மா மற்றும் குஷ்பு ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai