Enable Javscript for better performance
MS Dhoni Supreme Court Against Amrapali Group over Rs 40 crore dues- Dinamani

சுடச்சுட

    

    ரூ.40 கோடி இழுத்தடிப்பு: அமரபல்லி நிறுவனம் மீது உச்ச நீதிமன்றத்தில் தோனி வழக்கு

    By DIN  |   Published on : 27th March 2019 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ms dhoni amrapali

    ms dhoni amrapali

     

    ரூ.40 கோடி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் விவகாரத்தில் அமரபல்லி நிறுவனத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை வழக்கு தொடர்ந்தார்.

    அமரபல்லி கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தூதராக முன்னாள் இந்திய கேப்டன் தோனி, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி வழங்க வேண்டிய ரூ. 38.95 கோடியை வழங்காமல் அந்நிறுவனம் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது.

    அதில் ரூ. 22.53 கோடி அசல் தொகையும், ரூ. 16.42 கோடி வட்டியும் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்த ஆவணமும் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai