Enable Javscript for better performance
வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது விரைவில் தெரியவரும்: ரமேஷ் சென்னிதலா- Dinamani

சுடச்சுட

    

    வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது விரைவில் தெரியவரும்: ரமேஷ் சென்னிதலா

    By DIN  |   Published on : 27th March 2019 04:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Ramesh_Chennithala

     

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிடுவது விரைவில் தெரியவரும் என ரமேஷ் சென்னிதலா கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் ஒரிரு தினங்களில் முடிவெடுக்கப்படும். அவர் இங்கு போட்டியிட வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என்று பொய் பிரசாரம் செய்து வருவதாக அம்மாநில பாஜக மற்றும் இடதுசாரி அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai