Enable Javscript for better performance
விண்வெளி வெற்றிக்கு வித்திட்டவர்கள் நேருவும், இந்திராவும் தான்: காங்கிரஸ் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    விண்வெளி வெற்றிக்கு வித்திட்டவர்கள் நேருவும், இந்திராவும் தான்: காங்கிரஸ் வாழ்த்து

    By DIN  |   Published on : 27th March 2019 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress

     

    விண்வெளியில் நடத்தப்பட்ட வெற்றிகர சாதனைக்கு முக்கிய காரணமானவர்கள் நேருவும், இந்திராவும் தான் என காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. 

    மிஷன் சக்தி என்ற  பெயரில் விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.


    அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா எட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கூறியதாவது:

    இந்த மகத்தான சாதனைக்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். கடந்த 1961-ஆம் ஆண்டு இந்திய விண்வெளி திட்டம் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்திராவால் அது விரிவுபடுத்தப்பட்டது.

    செயற்கைகோளை சூட்டு வீழ்த்தும் இந்த திட்டம், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டு தற்போது நிறைவேறியுள்ளது. இதற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்ட மன்மோகன் சிங் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai