Enable Javscript for better performance
90 சதவீத முதல்முறை வாக்காளர்கள்: ட்விட்டர் இந்தியா தகவல்- Dinamani

சுடச்சுட

    

    90 சதவீத முதல்முறை வாக்காளர்கள்: ட்விட்டர் இந்தியா தகவல்

    By DIN  |   Published on : 27th March 2019 05:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    twitter1

     

    நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 90 சதவீத முதல்முறை வாக்காளர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த தகவலை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 1.5 கோடி முதல்முறை வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 10-ல் 7 முதல்முறை வாக்காளர்கள் ட்விட்டரில் தங்களின் அரசியல் கருத்துக்களை பகிர்வதன் மூலம் சமூகத்துக்கு பங்களிப்பதாக கருதுவதாக தேர்தல் ஆணையம் தகவலளித்துள்ளது.

    அரசால் தங்கள் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள நன்மை, தீமை குறித்து 46 சதவீத முதல்முறை வாக்காளர்கள் ட்விட்டரில் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை பதிவேற்றி வருகின்றனர். அதுபோன்று 36 சதவீதம் முதல்முறை வாக்காளர்கள் அரசியல் கருத்துக்களுக்காக ட்விட்டர் பயன்பாட்டை பெரிதாக விரும்புவதில்லை என்று ட்விட்டரில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள இளைஞர்களில் 54.6 சதவீதம் பேர் ஏதேனும் பொது நோக்கத்துக்கு ஆதரவு தேட பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. சுமார் 80 சதவீதம் பேர் சமூக ஊடகங்களின் மூலம் உலகளவில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் குறித்து அறிந்துகொள்ள பயன்படுத்துகின்றனர். 

    இந்த கருத்துக்கணிப்பு 18 வயது முதல் 22 வயதுடைய 1,602 ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் மற்றும் அதைப் பயன்படுத்தாதவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai