காப்பி அடிப்பதற்குக் கூட புத்திசாலித்தனம் வேண்டும்: யாரைச் சொல்கிறார் யோகி ஆதித்யநாத்

ஒருவர் செய்வதைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதாக இருந்தால் கூட அதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
காப்பி அடிப்பதற்குக் கூட புத்திசாலித்தனம் வேண்டும்: யாரைச் சொல்கிறார் யோகி ஆதித்யநாத்


அகமதாபாத்: ஒருவர் செய்வதைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதாக இருந்தால் கூட அதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சோம்நாத் கோயிலுக்கு வருகை தந்தது குறித்து கிண்டலாகப் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமீபத்தில் சோம்நாத் கோயிலுக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கே நமாஸ் செய்வதைப் போல அமர்ந்திருந்தார். இது கோயில், காலை மடக்கி உட்காருங்கள் என்று கோயில் பூசாரி ராகுல் காந்தியிடம் கூறிய பிறகே அவர் சரியாக அமர்ந்தார்.

ஒருவரைப் பார்த்து காப்பி அடிப்பதாக இருந்தால் கூட அதற்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமுறையினர் தேர்தல் நேரத்தில்தான் கோயிலுக்குச் செல்வார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் அவர்களுக்குக் கோயிலுக்குச் செல்ல நேரம் கிடைப்பதில்லை என்று ராகுல் மற்றும் பிரியங்காவின் சுவாமி தரிசனம் குறித்து யோகி ஆதித்யநாத் கிண்டலடித்துள்ளார்.

ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மக்களவைத்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com