தேர்தலில் போட்டியிட வேண்டாம்: முரளி மனோகர் ஜோஷியிடம் பாஜக வலியுறுத்தல்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான முரளி மனோகர் ஜோஷியை (85) கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது.
தேர்தலில் போட்டியிட வேண்டாம்: முரளி மனோகர் ஜோஷியிடம் பாஜக வலியுறுத்தல்


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான முரளி மனோகர் ஜோஷியை (85) கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தனது கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு முரளி மனோகர் ஜோஷி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கான்பூர் வாக்காளர்களே, நான் இந்தத் தொகுதியில் மட்டுமன்றி, வேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிடக் கூடாது என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலர் (அமைப்பு) ராம்லால் இந்தத் தகவலை எனக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்று அந்தக் கடிதத்தில் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்த வலியுறுத்தலை ஏற்று அவர் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பாரா? என்பது குறித்து உடனடி தகவல் இல்லை.
கான்பூர் தொகுதியில் கடந்த 2014-ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முரளி மனோகர் ஜோஷி, முந்தைய 2009-ஆம் ஆண்டு தேர்தலில் வாராணசி தொகுதி எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், கடந்த தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்காக தனது தொகுதியை முரளி மனோகர் ஜோஷி விட்டுக் கொடுத்தது நினைவுகூரத்தக்கது.
முரளி மனோகர் ஜோஷி மட்டுமன்றி, பாஜக-வின் முகமாக அறியப்பட்ட மற்றொரு தலைவரான எல்.கே. அத்வானிக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிப்பதில்லை என்று பாஜக தலைவர்கள் கூறி வரும் சூழலில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, 80 வயதைக் கடந்த சாந்த குமார், பி.சி. கந்தூரி, கரியா முண்டா, கல்ராஜ் மிஸ்ரா, விஜய சக்கரவர்த்தி ஆகிய எம்.பி.க்களுக்கும் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com