மக்களவை தேர்தல்: நாடு முழுவதும் ரூ.540 கோடி பணம், இலவச பொருள்கள் பறிமுதல்

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு வாகனச் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கணக்கில் வராத ரூ.540 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம், மதுபானங்கள் மற்றும்
மக்களவை தேர்தல்: நாடு முழுவதும் ரூ.540 கோடி பணம், இலவச பொருள்கள் பறிமுதல்


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு வாகனச் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கணக்கில் வராத ரூ.540 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம், மதுபானங்கள் மற்றும் இலவச பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதில், தமிழகத்திலிருந்தே அதிகபட்சமாக ரூ.107.24 கோடி மதிப்புள்ள பணம், இலவசப் பொருள்கள் மற்றும் மதுபானங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டன. 
அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் ரூ.104.53 கோடி, ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.103.4 கோடி, பஞ்சாப் ரூ.92.80 கோடி மதிப்புள்ள பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
கர்நாடகத்தில் ரூ.26.53 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.19.11 கோடி,  தெலங்கானாவில் ரூ.8.20 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டது. 
மொத்தம் ரூ.539.99 கோடி மதிப்பிலான பொருள்கள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு கடந்த கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. 
இதைத்தொடர்ந்து, மார்ச் 25ஆம் தேதி வரை ரூ.143.37 கோடி ரொக்கப்பணம், ரூ.89.64 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.131.75 போதைப்பொருள்கள், ரூ.162.93 கோடி மதிப்பில் தங்க, வெள்ளி நகைகள், ரூ.12.20 மதிப்புள்ள இலவசப் பொருள்களும் பறிமுதலாகியுள்ளன. 
நாடு முழுவதும், வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் இலவசப் பொருள்களை விநியோகம் செய்வதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில், தேர்தல் அதிகாரிகள், மேலிடப் பார்வையாளர்கள், பறக்கும் படை, கண்காணிப்பு அதிகாரிகள் என பல்வேறு அதிகாரிகளை நியமித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. 
இந்த அதிகாரிகள் தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவும், மே 23-இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com