Enable Javscript for better performance
சட்டவிரோதமாக மணல் அள்ளிய 4 தொழிலாளர்கள் பலி- Dinamani

சுடச்சுட

    


    ராஜஸ்தானில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 4 தொழிலாளர்கள், அந்த மணல் திட்டு சரிந்ததில் உயிரிழந்தனர்.
    அந்த மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து அந்த மாவட்டத்தின் கேசவராய்பாடன் நகர காவல் நிலைய அதிகாரி அபிஷேக் பாரீக் புதன்கிழமை கூறியதாவது:
    புண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சுனாகர் கிராமம் அருகே சம்பல் முதலைகள் காப்பகத்தில் பப்பு குஜ்ஜார் என்பவர் வேலைக்கு ஆள்களை அமர்த்தி சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தார்.
    அந்தப் பகுதியிலுள்ள பெரிய மணல் திட்டில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மணல் அள்ளிக் கொண்டிருந்தபோது அது திடீரெனச் சரிந்தது.
    அதில் புதையண்டு ஒரு பெண் உள்பட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    சந்திராசல் கிராமத்தைச் சேர்ந்த அந்த 4 பேரது உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
    இந்தச் சம்பவம் தொடர்பாக, தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய பப்பு குஜ்ஜார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார் அபிஷேக் பாரீக்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai