Enable Javscript for better performance
தேர்தலில் வாய்ப்பு மறுப்பு: சமாஜவாதியில் இணைந்தார் பாஜக எம்.பி.- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலில் வாய்ப்பு மறுப்பு: சமாஜவாதியில் இணைந்தார் பாஜக எம்.பி.

    By DIN  |   Published on : 28th March 2019 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    உத்தரப் பிரதேசத்தில் பாஜக சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து, அக்கட்சி எம்.பி. அன்சூல் வர்மா, சமாஜவாதி கட்சியில் இணைந்துவிட்டார்.
    உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் தொகுதி பாஜக எம்.பி. அன்சூல் வர்மா. இவர் அத்தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக ஜெய் பிரகாஷ் ராவத் என்பவருக்கு அத்தொகுதியை பாஜக ஒதுக்கியது. இதனால் அதிருப்தியடைந்த வர்மா, பாஜகவில் இருந்து விலகினார்.
    லக்னௌவில் உள்ள சமாஜவாதி கட்சித் தலைமையகத்துக்கு புதன்கிழமை சென்ற அவர், அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் வர்மா கூறியதாவது:
    எந்தவித நிபந்தனையும் இன்றி சமாஜவாதி கட்சியில் இணைந்துள்ளேன். எனது தொகுதியில் நிகழ்ந்த சில தவறுகள் குறித்து வலுவாகக் குரல் எழுப்பினேன். இது கூட எனக்கு பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம். இதனால், நான் மிகவும் வருத்தமடைந்தேன். கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு விரிவாகக் கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர்.
    உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கும், சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai